IPL வரலாற்றில் அதிக முறை டக் அவுட் ஆனவர்கள் பட்டியல் - முதலிடம் யார் தெரியுமா?
IPL வரலாற்றில் அதிக முறை டக் அவுட் ஆனவர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
18 வது ஐபிஎல் தொடர், கடந்த மார்ச் 22ஆம் திகதி தொடங்கி மே 25 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது. ஓவ்வொரு போட்டியிலும் ஏதேனும் புதிய சாதனைகள் படைக்கப்பட்டு வருகிறது.
கிளென் மேக்ஸ்வெல்
நேற்று, குஜராத் மற்றும் பஞ்சாப் அணிக்கு இடையே நடைபெற்ற போட்டியில், பஞ்சாப் வீரர் கிளென் மேக்ஸ்வெல் மோசமான சாதனை ஒன்றை படைத்தார்.
நேற்றைய போட்டியில் தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஓட்டம் எதுவும் எடுக்காமல் டக்அவுட் ஆனதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட் ஆனவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதன் மூலம் கிளென் மேக்ஸ்வெல் 19வது முறை டக்அவுட் ஆகி அதிக முறை டக் அவுட் ஆனவர் என்ற பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
டாப் 10 பட்டியல்
ரோகித் சர்மா மற்றும் தினேஷ் கார்த்திக், 18 முறை டக் அவுட் ஆகி 2வது மற்றும் 3வது இடங்களில் உள்ளனர்.
அதைதொடர்ந்து, பியூஷ் சாவ்லா மற்றும் சுனில் நரைன் 16 முறை டக் அவுட் ஆகி 4 வது மற்றும் 5 வது இடத்திலும் உள்ளனர்.
அடுத்ததாக மந்தீப் சிங் மற்றும் ரஷித் கான் 15 முறை டக் அவுட் ஆகி 6 வது மற்றும் 7 வது இடத்திலும், மணிஷ் பாண்டே மற்றும் அம்பத்தி ராயுடு 14 முறை டக் அவுட் ஆகி 8 மற்றும் 9வது இடங்களிலும் ஹர்பஜன் சிங் 13 முறை டக் அவுட் ஆகி 10வது இடத்திலும் உள்ளனர்.