மரண பயம் காட்டும் உலகின் மிக ஆபத்தான இடங்கள் பற்றி தெரியுமா? பயங்கர ஸ்பாட்ஸ்!
உலகில் உயிர் பயம் காட்டும் சில இடங்கள் பற்றி பார்ப்போம்.
ஆபத்தான இடங்கள்
நார்வே, குன்றின் மீது அமைந்துள்ள அந்தரத்தில் நீண்டு இருக்கும் பாறை. பூதத்தின் நாக்கு அல்லது ட்ரோல்டுங்கா என அழைக்கப்படுகிறது. இதனை அடைய 10 மணி நேரம் பயணிக்க வேண்டும்.
ஸ்பெயின், குவாடல்ஹோர்ஸ் ஆற்றின் மேலே ஒரு குன்றின் ஓரத்தில் எல் காமினிட்டோ டெல் ரே என்ற இடம் உள்ளது. இது ஒரு குறுகிய நடைபாதை. இதில் பலர் விழுந்து இறந்த பிறகு மூடப்பட்டு 2015ல் மீண்டும் திறக்கப்பட்டது.
பொலிவியா, மரண சாலை எனப்படும் வடக்கு யுங்காஸ் சாலை. கொடூரமான பாதைகளில் ஒன்று. செங்குத்தான பாறைகளின் ஓரத்தில் செதுக்கப்பட்டுள்ள ஹேர்பின் திருப்பங்கள் கொண்ட குறுகலான பாதை.
ஐஸ்லாந்தில் உள்ள பக்ராதல்சபிஜெல் எரிமலை. பணியும் நெருப்பு குழம்பும் ஒரேஇடத்தில் பார்க்கும் இடமாக இது இருக்கும்.
சாம்பியா, விக்டோரியா நீர்வீழ்ச்சியின் விளிம்பில் தொங்கும் குளம். இதன் விளிம்பை அடைவது மிகவும் ஆபத்தானது மற்றும் ஒரு சறுக்கல் மரணத்திற்கு வழிவகுக்கும்.