வாகனம் ஓட்டுவதற்கு ஆபத்தான நாடுகளின் பட்டியல்: முதலிடத்தில் எது?
உலகளவில் வாகனம் ஓட்டுவதற்கு ஆபத்தான நாடுகளின் பட்டியலில் தென் ஆப்பிரிக்கா முதலிடம் பிடித்துள்ளது.
அமெரிக்கா ஓட்டுநர் பயிற்சி நிறுவனமான ஜீடோபி, உலகளவில் 53 நாடுகளில் ஆய்வு மேற்கொண்டது.
இந்த ஆய்வில் குறித்த நாடுகளின் சாலை வேக வரம்புகள், போக்குவரத்து இறப்பு விகிதங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதில் வாகனம் ஓட்டுவதற்கு ஆபத்தான நாடுகளின் பட்டியலில் தென் ஆப்பிரிக்கா முதலிடம் பிடித்துள்ளது, தொடர்ந்து 2ம் ஆண்டாக தென் ஆப்பிரிக்கா முதலிடம் வகிக்கிறது.
தென் ஆப்பிரிக்காவில் பல சட்டங்கள் நடைமுறையில் இருந்தாலும், போக்குவரத்து அதிகாரிகளால் வாகன ஓட்டிகள் முறையாக விதிகளை பின்பற்றுவதில்லை எனவும் ஊழல் மலிந்து கிடக்கிறது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆபத்தான நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா 3ம் இடமும், இந்தியா 5ம் இடமும் பிடித்துள்ளன.
வாகனம் ஓட்டுவதற்கு பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் நோர்வே நீடிப்பது குறிப்பிடத்தக்கது.