பக்ரீத் கொண்டாட்டம் : தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை
இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து மசூதிகளில் தியாக திருநாளான பக்ரீத் பண்டிகை நாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
பக்ரீத் பண்டிகை
இன்று உலகம் முழுவதும் இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளான பக்ரீத் எனப்படும் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. (ஒரு சில நாடுகளில் நேற்று பிறை பின்பற்றி நேற்று கொண்டாடப்பட்டது) இதனால் தமிழகத்தில் அனைத்து மசூதிகளிலும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தி வருகின்றனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் பக்ரீத் பண்டிகை திருநாளுக்கு தங்களது வாழ்த்துக்களை அறிக்கை வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.
சிறப்பு தொழுகை
இந்த பக்ரீத் தியாகத்திருநாள் ஆனது ஹஜ் யாத்திரையை மையப்படுத்தி கொண்டாடப்படுகிறது. அதாவது ஆண்டுதோறும் துல் ஹஜ் இஸ்லாமிய மாதம் பிறை 10இல் இஸ்லாமியர்கள் ஹஜ் பயணம் மேற்கொண்டு இருக்கும்போது இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்நாளில் இறைத்தூதர் இப்ராஹிம் அவரது மகன் இஸ்மாயில் ஆகியோரின் தியாகத்தை நினைவுபடுத்தும் விதமாக கால்நடைகளை குர்பானி (பலி) கொடுத்து ஏழைகளுக்கு, உறவினர்களுக்கு அதனை வழங்குவார்கள்.
மக்காவுக்கு ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் பயணிகள் யாராக இருந்தாலும் எந்த மொழி எந்த நாடாக இருந்தாலும் அனைவரும் இரவுக்கு இறைவனுக்கு முன் சமம் என்பதை காட்டும் வாயில் வெள்ளை நிற ஆடைகளை அனைவரும் அணிந்து கொண்டு சடங்குகளை செய்வார்கள்.
இன்றைய தினம் இஸ்லாமியர்கள் புத்தாடை உடுத்தி, மசூதிகளில் சிறப்பு தொழுகைகளை மேற்கொண்டு, அதன் பிறகு கால்நடைகளை பலி கொடுத்து சமைத்து அதனை ஏழைகள், உறவினர்களுக்கு கொடுத்து மகிழ்வர்.