முதல் படத்திலேயே மாஸ் காட்டும் சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் - வைரலாகும் வீடியோ

LegendSaravanan TheLegend MosaloMosalu Harrisjeyaraj
By Petchi Avudaiappan Apr 09, 2022 05:23 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

இரட்டை இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி இயக்கியுள்ள தி லெஜன்ட் படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழகத்தின் முன்னணி தொழில் நிறுவனமான தி லெஜென்ட் சரவணா ஸ்டோர்ஸின் நிறுவனரான லெஜண்ட் சரவணன் தமிழக மக்கள் மத்தியில் மிகப் பிரபலம். அதற்கு காரணம் தனதுநிறுவனத்தின் விளம்பரப் படங்களில் ஓனரே நடிக்கும் வழக்கத்தை அவர் தான் தொடங்கி வைத்தார். அதற்கென ஹன்சிகா, தமன்னா என டாப் ஹீரோயின்களுடன் நடித்து கடும் விமர்சனங்களைப் பெற்றார். 

இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஹீரோவாக லெஜண்ட் சரவணன் களமிறங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதற்கேற்றாற்போல் தனது சொந்த செலவில் தி லெஜண்ட் என்னும் படத்தை தயாரித்து நாயகனாக நடித்து வருகிறார். இரட்டை இயக்குநர்கள்  ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌடெலா ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தில் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக், பிரபு, நாசர், யோகி பாபு, ரோபோ சங்கர் உட்பட பலரும் நடித்துள்ளனர். இந்நிலையில் தி லெஜன்ட் திரைப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது .  பா.விஜய் எழுதியுள்ள இப்பாடலில் லெஜண்ட் சரவணன் சூப்பரான நடன அசைவுகளை வெளிப்படுத்தியுள்ளார்.