104 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு - கதறி அழுத தாய்

Boy Died Rayan Moroccan ஆழ்துளை கிணறு சிறுவன்
By Thahir Feb 06, 2022 06:41 AM GMT
Report

மொராக்கோவில் 104 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் கிட்டத்தட்ட 4 நாட்களாக சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழந்த சமபவம் உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மொராக்கோவின் வடக்கு பகுதியில் உள்ள இகரா எனற் கிராமம் அருகே 104 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் ராயன் அவ்ரம் என்ற 5 வயது சிறுவன் விழுந்து சிக்கி கொண்டான்.

104 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு - கதறி அழுத தாய் | Moroccan Boy Rayan Died

இந்நிலையில் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த மீட்புக் குழுவினர் இயந்திரங்களின் உதவியுடன் நிலத்தை தோண்டும் பணியில் இரவு பகலாக ஈடுபட்டு வந்தனர்.

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனுக்கு மீட்பு படையினர் குழாய் மூலம் தண்ணீர் மற்றும் ஆக்ஸிஜன் வழங்கினர்.

104 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு - கதறி அழுத தாய் | Moroccan Boy Rayan Died

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் தன்னை துாக்குங்கள் என்று கத்தியதாக உறவினர் ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில் சிறுவன் விழுந்த ஆழ்துளை கிணற்றை சுற்றிலும் பாறைகள் மற்றும் நிலச்சரிவு காணப்பட்டதால் சிறுவனை மீட்பதில் தொய்வு ஏற்பட்டது.

ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சிறுவனை எப்போது மீட்பார்கள் என நுாற்றுக்கணக்கான கிராம மக்கள் திரண்டு இருந்தனர்.

104 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு - கதறி அழுத தாய் | Moroccan Boy Rayan Died

இதையடுத்து சிறுவன் உயிரிழந்து விட்டதாகவும் உயிரற்ற சடலமாக சிறுவனின் உடல் மீட்கப்பட்டதாகவும் மொராக்கோ அரச குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இந்நிலையில், சிறுவன் சடலமாக மீட்கப்பட்டது குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அசோசியேட் பிரஸ் தகவல்களின்படி, சிறுவன் ராயன் அவ்ரம் மீட்கப்பட்டபோது, தங்க நிற துணியால் போர்த்தப்பட்டு வெளியே கொண்டு வரப்பட்டுள்ளார்.

104 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு - கதறி அழுத தாய் | Moroccan Boy Rayan Died

அதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக, சிறுவனின் பெற்றோர் இருவரும் அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்சிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

104 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு - கதறி அழுத தாய் | Moroccan Boy Rayan Died

ஆனால் தகவல்களின்படி, மீட்புப் படையினர் சிறுவனை அடைவதற்குள், அவர் இறந்துவிட்டதாக இரண்டு அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.