சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் சட்னி! இன்னும் பல நன்மைகள்
முருங்கைக் கீரை சட்னியானது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பது மட்டுமல்லாமல் பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது.
என்னென்ன நன்மைகள்?
இன்றைய காலத்தில் தவறான வாழ்க்கை முறை பழக்கங்களால் பலர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவற்றை நாம் எந்தவித பக்க விளைவுகள் இல்லாமல் இயற்கை முறையில் கட்டுக்குள் கொண்டு வரலாம்.
அந்தவகையில் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவியாக இருக்கும் முருங்கை கீரை சட்னியின் நன்மைகளை பார்க்கலாம்.
* முருங்கை கீரையானது இன்சுலின் உணர்திறனை அதிகரித்து உடலில் உள்ள குளுக்கோஸை சிறப்பாகப் பயன்படுத்த அனுமதிக்கிறது. இது இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.
* இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து ஆகிய பல்வேறு ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் நன்மைகளை பெறலாம்.
* இதில் இருக்கும் நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
* இதில் உள்ள ஆண்டிஆக்சிடெண்ட் பண்புகள் தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாத்து நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.
* இதில் இருக்கும் நச்சு நீக்கும் பண்புகள் உடலில் உள்ள நச்சுகளை நீக்கி கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
முருங்கை சட்னி செய்வது எப்படி?
முதலில் முருங்கை இலைகளை கழுவவும். பின்னர், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
இவை அனைத்தையும் உப்பு மற்றும் தண்ணீரை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பின்னர் கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் சீரகம், கடுகு சேர்த்து தாளிக்கவும்.
அதனுள் அரைத்து வைத்திருந்த சட்னியை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பின்னர் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது சத்துள்ள முருங்கை சட்னி தயார்.