தோனியை பின்னுக்கு தள்ளிய இயான் மோர்கன் - புத்தம் புது சாதனை
டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் புது சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
சார்ஜா மைதானத்தில் நேற்று நடைபெற்ற இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கிடையேயான போட்டியில் இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இங்கிலாந்து அணி உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிக்கு தகுதிப் பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக வெற்றிகளைக் குவித்த கேப்டன் என்ற பெருமையை முன்னாள் இந்திய கேப்டன் தோனியை பின்னுக்கு தள்ளி இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் பெற்றுள்ளார்.
தோனி டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு 72 சர்வதேச போட்டிகளில் கேப்டனாக வழிநடத்தி 42 போட்டிகளில் வெற்றி தேடித் தந்துள்ளார். இயான் மோர்கன் 68 போட்டிகள் அவர் கேப்டனாக பொறுப்பேற்று இங்கிலாந்து அணியை 43 முறை வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.