எனக்கு அரசியல் வேண்டாம் : காங்கிரஸ் கட்சியில் சேர மறுப்பு தெரிவித்தது ஏன்? பிரசாந்த் கிஷோர் விளக்கம்

Indian National Congress
By Irumporai Apr 26, 2022 11:53 AM GMT
Report

காங்கிரசுக்கு என்னை விட தலைமை தான் தேவை என தேர்தல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் விளக்கம் அளித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்கு என்னை விட தலைமையே தேவை என கட்சியில் சேர மறுத்த பிரசாந்த் கிஷோர் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்: காங்கிரஸ் கட்சிக்கு என்னை விட தலைமையே தேவை.

காங்கிரஸ் கட்சிக்குள் உள்ள அடிப்படை பிரச்சினைகளை சீர்த்திருதங்கள் மூலம் தீர்க்கும் துணிச்சல் வேண்டும். காங்கிரஸ் கட்சியில் உள்ள சில அடிப்படை கட்டமைப்பு சிக்கல்களை தீர்க்க முன் வர வேண்டும்.

காங்கிரஸ் கட்சியில் சேரவும், தேர்தல்களுக்கு பொறுப்பேற்க கங்கிரஸ் விடுத்த கோரிக்கையை நான் ஏற்கவில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரசாந்த் கிஷோரை காங்கிரஸ் கட்சியில் சேர்க்க சிலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது விளக்கமளித்துள்ளார்.