"எடியூரப்பாவை நீக்கினால் அவ்வளவு தான்" - எச்சரிக்கை விடுக்கும் ஆன்மிக மடங்கள்
முதலமைச்சர் பதவியில் இருந்து எடியூரப்பாவை நீக்கினால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என லிங்காயத்து மடத் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.
கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு 78 வயது ஆனதால், பதவியில் இருந்து விலக்க பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கட்சிக்குள் இருப்பவர்களும் அவருக்கு அதிருப்தி தெரிவித்து வருவதால் கர்நாடகாவில் புதிய முதலமைச்சர்கள் அமைக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் லிங்காயத்து, ஜெகத்குரு முருகராஜேந்திர மடம், ரம்பாபுரி பீடம் உள்ளிட்ட பல்வேறு மடங்கள் எடியூரப்பாவுக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளன. முதலமைச்சர் பதவியில் இருந்து அவரை நீக்கும் முடிவை மேற்கொண்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனபல்வேறு மடங்களின் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.
இதனால் கர்நாடக அரசியலில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.