வறண்டு போன ஏரியில் கண்டெடுக்கப்படும் மனித உடல்களால் பீதி...!

By Petchi Avudaiappan May 11, 2022 02:47 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in அமெரிக்கா
Report

வறண்டு வரும் ஏரியில் இருந்து மனித உடல்கள் கண்டெடுக்கப்பட்டு வரும் சம்பவம் அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து அமெரிக்காவின் மிகப்பெரிய நீர்தேக்கமான மீட் ஏரியில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. அங்கு நிலவும் காலநிலை மாற்றம் காரணமாக நிலைமை மேலும் மோசமாக்கி வருவதால் மீட் ஏரி முற்றிலுமாக வறண்டு போகும் நிலைக்கு வந்துள்ளது.

இது ஒருபுறம் பொதுமக்களுக்கு கவலையை ஏற்படுத்த மறுபுறம் சுருங்கி வரும் மீட் ஏரியில் அடுத்தடுத்து மனித உடல்கள் கண்டெடுக்கப்படும் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 1 ஆம் தேதி முதன்முறையாக ஏரியின் கரையோரத்தில் சேற்றில் சிக்கியிருந்த பீப்பாய் ஒன்றில் இருந்து ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டது.

More-human-remains-found-atவிசாரணையில் இந்த உடல் 1970 அல்லது 80களில் சுட்டுக்கொல்லப்பட்ட ஒருவருடையது என தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஒரு வாரத்துக்கு பின்பு மீட் ஏரியில் இருந்து மேலும் பல மனித உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேசமயம் ஏரி முழுமையாக வறண்டு போகும்போது மேலும் பல உடல்கள் கண்டெடுக்கப்படலாம் என்று போலீசார் எச்சரித்துள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.