சித்த மருத்துவர் ஷர்மிகா மீது மேலும் 2 பேர் புகார் : வெளியான பரபரப்பு தகவல்
சித்த மருத்துவர் ஷரிமிகா மீது 2 பேர் இந்திய மருத்துவ ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளனர்.
சித்தமருத்துவர் ஷர்மிகா
கடந்தசில நாட்களுக்கு முன்பு சித்த மருத்துவர் ஷர்மிகாவின் வீடியோ இணையத்தில் வைரலானது அதில் உடல் எடை குறைப்பு , கர்ப்பம் தரித்தல் குறித்த ஷர்மிகாவின் வீடியோ கடும் சர்ச்சையினை ஏற்படுத்தியது.
குறிப்பாக அவரது வீடியோவில் : தினமும் நான்கு ஸ்பூன் நெய் சாப்பிட்டால் முகம் பொலிவாகும், ஒரு குலாப் ஜாமுன் சாப்பிட்டால் ஒரே நாளில் மூன்று கிலோ எடை கூடும், பெண்கள் கவிழ்ந்து படுத்தால் மார்பக புற்றுநோய் உண்டாகும், பெண்கள் நுங்கு சாப்பிட்டால் மார்பகம் பெரிதாகும் போன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி இருந்தார்.
மீண்டும் புகார்
இதனை தொடர்ந்து இந்திய மருத்துவ ஆணையரகம் தாமாக முன் வந்து இரண்டு கட்ட விசாரணை நடத்தியது.
இந்த நிலையில் தற்போது சித்த மருத்துவர் ஷர்மிகாவின் வீடியோவில் கூறிய சில கருத்துகளை பார்த்து சிகிச்சை எடுத்து கொண்டதில் தங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இரண்டு பேர் மருத்துவ ஆணையகரத்தில் புகார் அளித்துள்ளனர்.