குஜராத்தில்பொது மக்களின் உயிரை பலி வாங்கிய தொங்கும் பாலம் : 100 ஐ தாண்டிய உயிர் பலி

Gujarat Crime
By Irumporai Oct 31, 2022 03:09 AM GMT
Report

 குஜராத் மாநிலத்தின் மோர்பியில் தொங்கும் பாலம் உடைந்து பெரும் விபத்து ஏற்பட்டதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நூற்றுக்கும் மேல் அதிகரித்துள்ளதுபரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

தொங்கு பாலம் விபத்து

குஜராத்  மாநிலத்தின் மோர்பி நகரில் ஆற்றின் குறுக்கே தொங்கும் பாலம் அமைந்துள்ளது இதனை 100 ஆண்டுகள் பழமையான பாலமாகும் .சேதமடைந்த இந்த பாலத்தை சீரமைக்கும் பணி கடந்த 6 மாதங்களாக நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

தற்போது சீரமைப்பு பணிகள் தற்போது சீரமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் மக்களின் பயன்பாட்டிற்காக தொங்கும் பாலம் திறந்து வைக்கப்பட்டது .

குஜராத்தில்பொது மக்களின் உயிரை பலி வாங்கிய தொங்கும் பாலம் : 100 ஐ தாண்டிய உயிர் பலி | Morbi Suspension Bridge Accident Death

இந்த நிலையில் விடுமுறை நாளான நேற்று மாலை 6 மணி அளவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் அந்த பாலத்தில் குவிந்தனர் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என்று ஏராளமானோர் திரண்டதால் அந்த பாலத்தின் எடை தாங்க முடியாமல் திடீரென்று அறுந்து விழுந்து பெரும் விபத்திற்கு உள்ளானது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் மற்றும் மாநில மீட்பு படை வீரர்களும் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர் இந்த மீட்பு பணியில் ராணுவம் கடற்படை விமானப்படை தீயணைப்பு படையினரும் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

100ஐ தாண்டிய உயிர் பலி

அதிகாலை 3 மணிக்கு இராணுவ வீரர்கள் குழு சம்பவ இடத்திற்கு சென்றடைந்தபோது ஆற்றுக்குள் விழுந்தவர்கள் பலர் நீரில் மூழ்கி உயிரிழந்து விட்டனர் இதில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பதும் திடுக்கிடும் தகவலாக  தெரியவந்தது .

மேலும் ஆற்றில் மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது இதனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை உயரக்கூடும்  என்று அதிர்ச்சியில் மக்கள் உறைந்துள்ளனர் .

இன்று அதிகாலை நிலவரப்படி பாலம் இடிந்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளதாக குஜராத் தகவல் துறை தெரிவித்துள்ள நிலையில் இதுவரை விபத்தில் சிக்கியவர்கள் 177 பேர் மீட்கப்பட்டுள்ளனர் இதில் 19 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது