விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை காணவரும் பிரதமர் : அவசரமாக பெயிண்ட் அடிக்கப்படும் மருத்துவமனை , விளாசும் நெட்டிசன்கள்

Gujarat
By Irumporai Nov 01, 2022 05:33 AM GMT
Report

குஜாராத்தின் மோர்பி நகரில் பழமையான தொங்கு பாலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென இடிந்து விழுந்தது இந்த விபத்தில் 100 க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

தொங்கு பாலம் விபத்து

இந்த விபத்தில் பாதிக்கப்பட்டோர் மோர்பி சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இந்த நிலையில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை பிரதமர் மோடி இன்று நேரில் சந்திக்கவுள்ளார்.

விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை காணவரும் பிரதமர் : அவசரமாக பெயிண்ட் அடிக்கப்படும் மருத்துவமனை , விளாசும் நெட்டிசன்கள் | Morbi Is Being Renovated Modi Vist

ஆகவே மோர்பி சிவில் மருத்துவமனையில் இரவோடு இரவாக பெயிண்டிங் மற்றும் தூய்மை பண்களை மேற்கொண்டனர். இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது. 

மருத்துவமனை அவசரமாக புதுப்பிப்பு

கடந்த சில வருடங்களாகவே பாஜக அரசின் மீது பல்வேறு விமர்சனங்கள் வரும் நிலையில் தற்போது தொடர்ந்து இது போன்ற நிகழ்வுகள் அரங்கேறுவது பிரதமர் மோடியின் மீதும் பாஜக அரசின் மீதும் கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.