குஜராத் தொங்கு பாலம் விபத்து : பலியானவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி

Gujarat Death
By Irumporai Oct 31, 2022 05:04 AM GMT
Report

குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தொங்கும் பாலம் அறுந்து விழுந்த சம்பவம் இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 100 ஆண்டுகள் பழமையான இந்த பாலம் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது .

அறுந்து விழுந்த பாலம்

இந்த நிலையில் நேற்று அளவுக்கு அதிகமான எடை காரணமாகவும் அனுமதியின்றி அதிகமான மக்கள் கூறியதன் காரணமாக பாலம் அறுந்து விழுந்ததாக கூறப்படுகிறது

குஜராத் தொங்கு பாலம் விபத்து : பலியானவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி | Morbi Cable Bridge Pm Modi Tribute

 இந்த விபத்தில் நூற்றுக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர் இதுவரை 177 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது இந்த நிலையில் குஜராத்தில் இன்று நடைபெறவிருந்த நிகழ்ச்சியை பிரதமர் மோடி ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

பிரதமர் மோடி அஞ்சலி

அதே சமயம் விபத்தில்  பலியாணவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.

மேலும் மத்திய அரசு  குஜராத் மாநில அரசுடன் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் , மோர்பியில் நடந்த விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின்  உறவினர்களுக்கும் PMNRF நிதியிலிருந்து ரூ 2 லட்சம் ரூபாயும்.

காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000. வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.