குஜராத்தில் 141 பேரை காவு வாங்கிய கேபிள் பாலம் விபத்து - 9 பேர் அதிரடி கைது

Gujarat
By Nandhini Oct 31, 2022 09:35 AM GMT
Report

குஜராத்தில் 141 பேரை காவு வாங்கிய கேபிள் பாலம் விபத்து தொடர்பாக போலீசார் 9 பேரை கைது செய்துள்ளனர்.

மோர்பி நகர் கேபிள் பாலம்

குஜராத்தில் மோர்பி என்ற நகரில் மச்சூ நதி பாய்கிறது. இந்த நதியின் குறுக்கே 233 மீட்டர் நீளம், 4.6 அடி அகலத்தில் கேபிள் நடைபாலம் அமைக்கப்பட்டிருந்தது.

சுமார் 140 ஆண்டுகளுக்கு முன், மரம், கேபிள்கள் மூலம் கட்டப்பட்ட இப்பாலத்தில் ரூ.2 கோடியில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த தீபாவளியன்று மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது.

morbi-cable-bridge-collapsed-gujarat

பாலம் அறுந்து விழுந்து விபத்து

சுற்றுலாத் தலமான விளங்கும் இப்பகுதியில் நேற்று 500-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டிருந்தனர். அப்போது பாலத்தில் பயணம் செய்த மக்கள், எதிர்பாராதவிதமாக பாலம் உடைந்து விழுந்தது. இந்த விபத்தில் பாலத்தில் இருந்தவர்கள் அனைவரும் ஆற்றில் பொத பொதவென விழுந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பேரிடர் மீட்புப்படை வீரர்களும், மாநில பேரிடர் மீட்புப்படையினரும் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில், தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்துள்ளது. இறந்தவர்களில் பலர் குழந்தைகள், பெண்கள் மற்றும் வயதானவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை 10-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

விபத்து நடந்த பகுதியை பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் ஆய்வு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

9 பேர் கைது

இந்நிலையில், மோர்பி பாலம் அறுந்து விழுந்த விபத்து தொடர்பாக பாலத்தை புதுப்பித்த கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.