குஜராத்தில் கேபிள் பாலம் அறுந்து விழுந்து விபத்து - பதற வைக்கும் CCTV காட்சி…!
குஜராத்தின் மோர்பி நகர் கேபிள் பாலம் அறுந்து விழும் சிசிடிவி கேமரா காட்சி தற்போது இணையதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மோர்பி நகர் கேபிள் பாலம்
குஜராத்தில் மோர்பி என்ற நகரில் மச்சூ நதி பாய்கிறது. இந்த நதியின் குறுக்கே 233 மீட்டர் நீளம், 4.6 அடி அகலத்தில் கேபிள் நடைபாலம் அமைக்கப்பட்டிருந்தது. சுமார் 140 ஆண்டுகளுக்கு முன், மரம், கேபிள்கள் மூலம் கட்டப்பட்ட இப்பாலத்தில் ரூ.2 கோடியில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த தீபாவளியன்று மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது.
பாலம் அறுந்து விழுந்து விபத்து
சுற்றுலாத் தலமான விளங்கும் இப்பகுதியில் நேற்று 500-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டிருந்தனர். அப்போது பாலத்தில் பயணம் செய்த மக்கள், எதிர்பாராதவிதமாக பாலம் உடைந்து விழுந்தது.
இந்த விபத்தில் பாலத்தில் இருந்தவர்கள் அனைவரும் ஆற்றில் விழுந்தனர். இந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளது. இறந்தவர்களில் பலர் குழந்தைகள், பெண்கள் மற்றும் வயதானவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை 10-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த பகுதியை பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் ஆய்வு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
வெளியான சிசிடிவி காட்சி
இந்நிலையில், தற்போது மோர்பி நகர் கேபிள் பாலம் அறுந்து விழும் சிசிடிவி கேமரா காட்சி சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், சில இளைஞர்கள் பாலத்தில் நின்றபடி தங்கள் மொபைல் போனில் ஆர்வமாக செல்பி எடுத்து கொண்டிருந்த போது, எதிர்பாரதவிதமாக கேபிள் அறுந்து பாலம் விழுந்தது.
CCTV footage of #MorbiBridge #Gujarat just before the incident happened #MorbiBridgeCollapse ??
— Drake (@drakeslayer100) October 31, 2022
In this video,we can see a few youngsters why are they shaking the bridge ??
मोरबी पुल #Accident Gujarat's Morbi #गुजरात India #Gujarat #मोरबी #GujaratBridgeCollapse ? pic.twitter.com/zP5a9ix3dC