மூவேந்தர் முன்னேற்றக் கழகம் - வரலாறும் பின்னணியும்!
மூவேந்தர் முன்னேற்றக் கழகம்
மூவேந்தர் முன்னேற்றக் கழகம் முக்குலத்தோர் என்று அழைக்கப்படும் சமூக மக்களின் மேம்பாட்டிற்காகத் தொடங்கப்பட்ட ஒரு தமிழக அரசியல் கட்சி ஆகும். இதன் நிறுவனர் ஜி.எம்.பிரேம்குமார் வாண்டையார்.
இவரது மறைவுக்குப் பின் தற்போதைய தலைவராக ஜி.எம்.ஸ்ரீதர் வாண்டையார் என்பவர் இருந்து வருகிறார்.
கோரிக்கைகள்
கள்ளர், மறவர், அகமுடையோர் ஆகியோரை ஒன்றிணைத்து தேவரினம் என்று அழைக்க வேண்டும், இந்த சமூகங்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும், மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வேண்டும் போன்ற கோரிக்கைகள் வைத்துள்ளனர்.
தேர்தல் களத்தில்
2011 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில், சிதம்பரம் தொகுதி ஒதுக்கப்பட்டு, அக்கட்சியின் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு அளித்தனர்.
2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து கும்பகோணம் தொகுதியில் போட்டியிட ஸ்ரீதர் வாண்டையார்
இரண்டாம்
இடம் பெற்றார்.
2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.