அரிய நிகழ்வு: நிலவின் கீழே நேர்கோட்டில் தோன்றிய கோள்கள் - ஆச்சரியத்தில் மக்கள்

Viral Photos
By Sumathi Feb 24, 2023 11:01 AM GMT
Report

 நிலவிற்கு நேர் கீழே ஒரே நேர்கோட்டில் புதிதாக இரண்டு கோள்கள் தோன்றிவதை மக்கள் வியப்புடன் பார்த்து வருகின்றனர்.

அரிய நிகழ்வு

கடந்த ஆண்டில் செவ்வாய், வியாழன், சனி, நெப்டியூன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்தித்த நிகழ்வு நடந்தது. அதேபோல், சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கோளான வியாழனும், சூரியனுக்கு அருகே இரண்டாவதாக உள்ள கோளான வெள்ளி (வீனஸ்) ஒரே நேர்கோட்டில் சந்தித்துள்ளன.

அரிய நிகழ்வு: நிலவின் கீழே நேர்கோட்டில் தோன்றிய கோள்கள் - ஆச்சரியத்தில் மக்கள் | Moon Jupiter Venus Meet Straight Line In Sky

நேற்று மாலை நிலவுக்கு நேர்கீழே வியாழன் மற்றும் வெள்ளி ஒரே நேர்கோட்டில் காட்சி அளித்தன. அது என்ன கிரகம் என்று தெரியாத நிலையில், இந்த அரிய வானியல் நிகழ்வை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். விடியற்காலையில் மட்டுமே வெள்ளி தோன்றும் என கூறப்படும் நிலையில்

ஒரே நேர்கோட்டில் கோள்கள்

மாலை பொழுதில் வெள்ளியை கண்டது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஒரே நேர்கோட்டில் வியாழன், வெள்ளி கிரகங்களை காணலாம் என்றாலும் நிலவு அதன் நேர்கோட்டில் சந்திக்குமா என்பது தெரியவில்லை.

சூரிய குடும்பத்தில் உள்ள 9 கோள்களும் அதனதன் வெவ்வேறு நீளமுள்ள வட்டப்பாதைகளில் சுற்றி வரும் நிலையில் மிக அரிதாக இதுபோல ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் வானியல் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.