தமிழக மக்களால் நம்பர் 1 இடத்தை பிடித்த மு.க.ஸ்டாலின்
மக்கள் ஆதரவு அதிகம் கொண்ட மாநில முதல்வர்கள் பட்டியலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலிடம் பிடித்துள்ளார்.
இந்தியா டுடே ஊடகம் மூட் ஆப் தி மக்களிடம் கருத்து கணிப்பு நடத்தி மூட் ஆப் தி நேஷன் சர்வே வெளியிடுவது வழக்கம். பல்வேறு விதமான கேள்விகள் அடிப்படையில் இந்த சர்வே நடக்கிறது.
இதனிடையே இந்த முறை மாநில முதல்வர்களின் மக்கள் ஆதரவு அதிகம் கொண்ட முதல்வர்கள் என்ற கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. ஒவ்வொரு மாநிலத்திலும் அதிக ஆதரவு கொண்ட முதல்வர்கள் குறித்து இதில் கேள்வி கேட்கப்பட்டது.
இதில் மக்கள் ஆதரவு அதிகம் கொண்ட மாநில முதல்வர்கள் பட்டியலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலிடம் பிடித்துள்ளார். அவருக்கு 44% மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் 38% மக்கள் ஆதரவுடன் இரண்டாம் இடத்திலும், கேரளா முதல்வர் பினராயி விஜயன் 35% மக்கள் ஆதரவுடன் 3வது இடத்தையும் பிடித்துள்ளனர்.