மாதச் சம்பளம் ரூ.2 கோடி...வேலைக்கு செல்ல யோசிக்கும் பெண்கள் - காரணம் என்ன?

China
By Thahir May 18, 2023 10:04 AM GMT
Report

பணிப்பெண் வேலைக்கு மாதம் ரூ.2 கோடி சம்பளம் ஆள் கிடைக்காமல் வலை வீசி தேடும் பெண் குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

சீனாவின் ஷாங்காய் நகரத்தில் வசிக்கும் பெண் ஒருவர் தனக்கு தனிப்பட்ட பணிப்பெண் ஒருவரை தேடுகிறார். தனக்கு பணி செய்ய உள்ள பணிப்பெண் 24 மணி நேரமும் தன்னை கவனித்துக் கொள்ள வேண்டும். இந்த பணிக்காக மாதந்தோறும் ரூ.16 லட்சத்துக்கும் மேல் சம்பளம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இதற்கான விளம்பரம் செய்தித்தாளில் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் படி பணிப்பெண்ணுக்கு மாதத்திற்கு ரூ.1,644,435.25 அதாவது ஒரு வருடத்திற்கு ரூ.1.97 கோடி முதலாளியிடம் இருந்து வழங்கப்படும்.

Monthly salary of Rs.2 crore

இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர் 165 செ.மீ உயரமும், எடை 55 கிலோவுக்கும் குறைவாகவும் இருக்க வேண்டும். அவர் 12 அல்லது அதற்கு மேல் படித்திருக்க வேண்டும்.

தோற்றத்தில் நேர்த்தியாகவும் சுத்தமாகவும் இருக்க வேண்டும். ஆடவும், பாடவும் தெரிந்திருக்க வேண்டும். ஹவுஸ் கீப்பிங் சர்வீஸ் கொடுத்துள்ள இந்த விளம்பரம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.