அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1000 - முதலமைச்சர் அதிரடி!

M K Stalin Tamil nadu Government of Tamil Nadu
By Sumathi Apr 05, 2023 01:25 PM GMT
Report

தேர்ந்தெடுக்கப்படும் அரசுப் பள்ளி மாணவர்கள் 1000 ரூபாய் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மாதம் ரூ.1000

10ஆம் வகுப்புப் படிக்கும் 500 மாணவர்கள், 500 மாணவிகள் என 1000 மாணவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறிவுத் திட்டத்தின்கீழ் உதவித் தொகை வழங்கப்படும்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1000 - முதலமைச்சர் அதிரடி! | Monthly Rs 1000 For Govt School Students

குறிப்பாகத் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு ஐஐடி உள்ளிட்ட முன்னணி கல்வி நிறுவனங்களுடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு வழிகாட்டுதல் வழங்கப்படும்.

திறனறிவுத் திட்டம்

அவர்கள் 12ஆம் வகுப்பை நிறைவு செய்யும் வகையில் ஒவ்வொரு மாதமும் ரூ.1000 வழங்கப்படும். மேலும், இளநிலை மற்றும் முதுநிலை கல்லூரிப் படிப்பைத் தொடரும்போதும் 1000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.

இதற்கிடையில், பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ல் தொடங்கவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.