தொடர்ந்து குமுறும் எரிமலை - ஸ்பெயினில் எரிந்து சாம்பலாகும் வீடுகள்
spain
palmavolcano
By Petchi Avudaiappan
ஸ்பெயினில் எரிமலை வெடிப்பால் அப்பகுதியில் இருந்த வீடுகள் தீப்பற்றி எரிந்து சேதமடைந்துள்ளது.
ஸ்பெயினின் லா பால்மா தீவில் உள்ள எரிமலையில் இருந்து தொடர்ந்து நெருப்புக் குழம்பு கடந்த ஒரு மாதமாக வெளியேறி வருகிறது. ஏற்கெனவே லா பால்மாவில் உள்ள 2 ஆயிரம் கட்டங்கள் எரிமலைக் குழம்பில் சிக்கி தீக்கிரையாகி இருக்கும் நிலையில் மீண்டும் நெருப்புக் குழம்பு வெளியேறி ஆறாக ஓடுவதால், எஞ்சிய வீடுகளும் தீப்பற்றி எரிந்தது.
இதனால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் எரிமலை சீற்றத்தால் ஏற்பட்ட புகை மண்டலத்தால் அங்கு விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.