தமிழகத்தில் இயல்பை விட கூடுதலாக பருவமழை பெய்யும் - இந்திய வானிலை மையம்

Heavy Rain Tamilnadu Monsoon
By Thahir Nov 05, 2021 07:24 AM GMT
Report

தென் தமிழகத்தில் அடுத்த 2 வாரத்தில் இயல்பை விட கூடுதலாக பருவமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.

இதனால், மாநிலம் முழுவதும் உள்ள நீர்த்தேக்கங்கள் வேகமாக நிரம்பி வருகின்றது. தமிழ்நாட்டில், வடகிழக்குப் பருவமழை 1.10.2021 முதல் 2.11.2021 வரை 261.7 மி.மீ பெய்துள்ளது.

கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை முதல் மிக கனமழை இருந்து வந்த நிலையில் அடுத்த இரண்டு வாரத்திற்கான மழை குறித்த முன்னறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

அதில் வடகிழக்கு பருவ மழை மேலும் தீவிரமடைந்து அடுத்த இரண்டு வாரத்தில் உள் தமிழகம் மற்றும் தென் தமிழகத்தில் இயல்பை விட கூடுதல் மழையை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.