கைக்குழந்தையை தந்தையிடம் பறித்து 3வது மாடியில் இருந்து வீசிய குரங்குகள்!

Uttar Pradesh Crime
By Sumathi Jul 18, 2022 09:38 AM GMT
Report

உத்தர பிரதேசத்தில் தந்தையிடம் இருந்து 4 மாத ஆண் குழந்தையை குரங்குகள் பறித்து 3மாடி வீட்டின் மேல்தளத்தில் இருந்து வீசி கொன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

4 மாதக் குழந்தை

உத்தர பிரதேசம், பரெய்லி மாவட்டத்தில் துங்கா கிராமத்தில் வசித்து வருபவர் நிர்தேஷ் உபதியே (25). இவருக்கும் ரேஷ்மி என்ற பெண்ணிற்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

கைக்குழந்தையை தந்தையிடம் பறித்து 3வது மாடியில் இருந்து வீசிய குரங்குகள்! | Monkeys Threw A 4 Month Baby Away From 3Rd Floor

இருவரும் 3 அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். இதையடுத்து இருவருக்கும் கடந்த மார்ச் மாதத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. மாலை வேளையில் இருவரும் தங்களது 4 மாதக் குழந்தையோடு மொட்டை மாடியில் நேரம் செலவிடுவதை வழக்கமாக வைத்திருந்த

குரங்குகள் 

இந்த தம்பதிக்கு 2 நாட்களுக்கு முன்பு மீளமுடியாத சோகம் நிகழ்ந்தது. அது என்னவென்றால், இரு தினங்களுக்கு முன்பு அக் குழந்தையுடன் தங்களது வீட்டின் மொட்டை மாடியில் வழக்கம்போல இருவரும் வாக்கிங் சென்றுள்ளனர்.

கைக்குழந்தையை தந்தையிடம் பறித்து 3வது மாடியில் இருந்து வீசிய குரங்குகள்! | Monkeys Threw A 4 Month Baby Away From 3Rd Floor

எதிர்பாராவிதமாக 10 க்கும் மேற்பட்ட குரங்குகள் நிர்தேஷ்-ரேஷ்மி தம்பதியினரை சூழ்ந்தன. திடீரென அவர்களை சூழ்ந்ததால் இருவரும் நிலை தடுமாறினர். குழந்தை நிர்தேஷின் கையில் இருந்த நிலையில்,

கீழே வீசப்பட்ட குழந்தை

இருவரும் குரங்குகளை விரட்ட முற்பட்டனர். ஆனால் குரங்குகள் விடாப்பிடியாக நிர்தேஷ் மற்றும் ரேஷ்மியை பிடித்துக்கொண்டு அட்டகாசம் செய்துள்ளன. இந்த போராட்டத்தில் குழந்தையோடு மாடி படியின் கதவை திறக்க முற்பட்ட நிர்தேஷின் கைகளில் இருந்து குழந்தை சற்று நழுவியது.

அந்த குறிப்பிட்ட நேரத்தில் குரங்குகள் குழந்தையை நிர்தேஷிடம் இருந்து பிடுங்கின. பின்னர் கண் இமைக்கும் நேரத்தில் குரங்குகள் குழந்தையை தூக்கி 3வது மாடியில் இருந்து கீழே வீசின.

இதைக்கண்டு அதிர்ச்சியுற்ற நிர்தேஷ், ரேஷ்மி குழந்தை விழுந்த இடத்தை நோக்கி விரைந்து சென்று பார்த்தனர். ஆனால் அக்குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து கிடந்தது. இதையடுத்து குழந்தையின் உடல் மீட்கப்பட்டு, இறுதி சடங்குகள் செய்யப்பட்டன.