குரங்கு அம்மை நோய்; தமிழக விமான நிலையங்களில் பயணிகளை கண்காணிக்க உத்தரவு..!

Chennai
By Thahir May 31, 2022 08:51 PM GMT
Report

கடந்த சில நாட்களாக சில நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவி வரும் நிலையில் தமிழகத்திற்கு வரும் விமான பயணிகளை கண்காணிக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்கா,லண்டன்,கனடா,உள்ளிட்ட நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்பு அதிகரித்து வருவதால், இந்த நாடுகளில் இருந்து சென்னை,கோவை விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குரங்கு அம்மை நோய்; தமிழக விமான நிலையங்களில் பயணிகளை கண்காணிக்க உத்தரவு..! | Monkeypox Order To Monitor Passengers Tn Airports

விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு தொடர் காய்ச்சல்,உடல் வலி,தோல் அலர்ஜி,அம்மை கொப்புளங்கள் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேற்கண்ட அறிகுறிகள் இருந்தால் பயணிகள் உடனடியாக 21 நாட்கள் வரை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.

மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அனைவரும் தங்களுக்குட்பட்ட பகுதிகளை தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட வேண்டும் என்றும்,

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளின் விவரங்களை சேகரித்து தொடர்ந்து அவர்களது உடல்நிலை குறித்து கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் தமிழ்நாடு பொதுசுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.