காற்று மூலம் பரவுகிறதா குரங்கு அம்மை - WHO எச்சரிக்கை!

China India Italy Monkeypox
By Sumathi Jun 09, 2022 07:22 PM GMT
Report

காற்றின் மூலமாக குரங்கு அம்மை பரவுகிறதா என்பது குறித்து விரிவான ஆய்வு தேவை என, உலக சுகாதார மையம் தெரிவித்து உள்ளது.

குரங்கு அம்மை

இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, சீனா, பிரிட்டன் உட்பட உலக நாடுகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்று ஆட்டிப் படைத்தது.

காற்று மூலம் பரவுகிறதா குரங்கு அம்மை - WHO எச்சரிக்கை! | Monkeypox Cases Reported To Who

இந்த வைரஸ் தொற்றுக்கு எதிராக பல்வேறு நாடுகள் தடுப்பூசி கண்டுபிடித்து விட்டன. தற்போது பொது மக்கள் கொரோனா தொற்றுடன் வாழ பழகிக் கொண்டனர் என்று தான் கூற வேண்டும்.

தனிமைப்படுத்தினால் பரவலை தவிர்க்கலாம்

கொரோனா வைரஸ் தொற்றைத் தொடர்ந்து, உலக நாடுகளிடையே குரங்கு அம்மை நோய் புதிய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

காற்று மூலம் பரவுகிறதா குரங்கு அம்மை - WHO எச்சரிக்கை! | Monkeypox Cases Reported To Who

இந்நிலையில் உலகம் முழுவதும் இதுவரை 29 நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதன்படி இதுவரை மொத்தம் 1,000-க்கும் மேற்பட்ட குரங்கு அம்மை பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறுகையில், குரங்கு அம்மை நோய் பரவல் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் இருந்தாலும், அது தற்போது முற்றிலும் கட்டுப்படுத்தக் கூடிய நிலையில் உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.

குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டவர்கள், தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

நெருங்கிய தொடர்பு மூலமாக மட்டுமே இதுவரை குரங்கு அம்மை பரவி வருவது கண்டறியப்பட்டு உள்ளதாகவும், காற்றின் மூலமாக குரங்கு அம்மை பரவுகிறதா என்பது குறித்து விரிவான ஆய்வு தேவை என்றும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.