ஜெர்மனியில் சிறுவர்களிடம் அதிகரிக்கும் குரங்கம்மை : அச்சத்தில் பொதுமக்கள்

Monkeypox Germany
By Irumporai Aug 10, 2022 10:17 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

குரங்கம்மை என்ற நோய் தொற்று தற்போது உலக நாடுகள் பலவற்றில் பரவத் தொடங்கியுள்ளது. அந்தவகையில், கடந்த மே மாதம் ஐரோப்பாவில் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அதிகரிக்கும் குரங்கம்மை

ஜெர்மனியில் உள்ள 4 வயது குழந்தைக்கு தற்போது குரங்கம்மை நோய் தொற்று பாதிப்பு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த குழந்தை ஏற்கனவே நோய் தொற்று பாதிப்படைந்த இருவருடன் வசித்து வந்ததால் இந்த வைரஸ் பரவியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

ஜெர்மனியில் சிறுவர்களிடம் அதிகரிக்கும் குரங்கம்மை : அச்சத்தில் பொதுமக்கள் | Monkey Pox Virus Increase Germany

ஜெர்மனியில் அதிகரிக்கும் தொற்று

ஜெர்மனி இதுவரை ஜெர்மனியில் 2,900 பேர்க்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போது 40,000 "ஜின்னியோஸ் தடுப்பூசி" இருக்கும் நிலையில் மேலும் 2,00,000 டோஸ் தடுப்பூசியை ஆர்டர் செய்துள்ளதாக ஜெர்மன் அரசு கூறியுள்ளது.

உலகளவில் இதுவரை 78 நாடுகளில் 18,000 க்கும் மேற்பட்டோர் குரங்கம்மை வைரஸால் பாதிக்கப்பட்ததாக, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.