டெல்லிக்கும் பரவியது குரங்கு அம்மை : அதிர்ச்சியில் பொதுமக்கள்

Delhi ‎Monkeypox virus
By Irumporai Jul 24, 2022 07:12 AM GMT
Report

டெல்லியில் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

பரவும் குரங்கு அம்மை

உலகின் பல நாடுகளில் மிக வேகமாக குரங்கு அம்மை நோய் பரவி வரும் நிலையில் கேரளாவில் 3 பேர் குரங்கு அம்மை நோய்க்கு பாதிக்கப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

டெல்லிக்கும் பரவியது குரங்கு அம்மை : அதிர்ச்சியில் பொதுமக்கள் | Monkey Pox Spread In Delhi After Kerala

டெல்லியில் குரங்கு அம்மை

இந்த நிலையில் கேரளாவை அடுத்து தற்போது டெல்லியில் உள்ள ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.31 வயதான இந்த நபர் எந்த வித வெளிநாட்டு பயணங்களும் செய்யாத நிலையில் திடீரென குரங்கு அம்மை நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குரங்கு அம்மை தொற்று ஏற்பட்ட அந்த நபர் டெல்லியில் உள்ள  மவுலானா ஆசாத் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது .

இந்த நிலையில் குரங்கு அம்மை நோயினை சர்வதேச அவசர நிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.