குறும்பு கார குரங்கிற்கு மூதாட்டி மீது மலர்ந்த காதல்.. கட்டியணைத்து அரவணைப்பு!

Love Monkey Old Lady
By Thahir Jun 25, 2021 09:15 AM GMT
Report

மனிதர்களை போலவே விலங்குகளுக்கும் அன்புணர்வு உள்ளது. இதை உறுதி செய்யும் விதமாக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், குரங்கு ஒன்று மூதாட்டியை கட்டிப்பிடித்து அன்பு காட்டும் வீடியோ, பலரையும் வியப்புக்குள் ஆழ்த்தியுள்ளது.

குறும்பு கார குரங்கிற்கு மூதாட்டி மீது மலர்ந்த காதல்.. கட்டியணைத்து அரவணைப்பு! | Monkey Oldlady Love

ஜோத்பூரில் உள்ள ஃபலோடி பகுதியில் வசிக்கும் 90 வயதான மூதாட்டி பன்வ்ரி தேவி என்பவரை குரங்கு கட்டிபிடித்து அன்பை வெளிக்காட்டிய சம்பவம் நடந்துள்ளது.

அந்த குரங்கினை பன்வ்ரி தேவி, உணவளித்து பராமரித்து வந்ததாக சொல்லப்படுகிறது.ஆனால் கடந்த சில நாட்களாக அவர் படுக்கையிலேயே இருந்து வருவதால், அவரை காண வந்த குரங்கு, அவரது உடல்நிலையை கண்டு அவரை ஆரத்தழுவி அன்பினை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.