குரங்கு அம்மை பாதித்த இளைஞர் திடீர் மரணம் : கேரளாவில் பரபரப்பு
உலகம் முழுவதும் கொரோனா தொற்று அச்சுறுத்தி வருகிற நிலையில் குரங்கு அம்மை நோயும் சில நாடுகளை பயமுறுத்துகிறது.
குரங்கு அம்மை
இந்தநிலையில் வெளிநாட்டில் இருந்து கேரளா வந்த ஒருவருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு குரங்கு அம்மை பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது.

இது தான் இந்தியாவில் குரங்கு அம்மை நோயின் முதல் பாதிப்பாக கருதப்பட்டது. அதன்பிறகு கேரளாவில் மேலும் 2 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்புக்கு ஆளானார்கள். அவர்களும் வெளிநாட்டில் இருந்து வந்த மூவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
மரணம்
இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து திருச்சூருக்கு 22 வயது வாலிபர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் நேற்று திடீரென இறந்தார். குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட வாலிபர் இறந்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது