சரக்கு பாட்டிலை திருடி ருசி பார்க்கும் வினோத குரங்கு - இணையதளத்தில் வைரலாகும் வீடியோ...!

Viral Video Uttar Pradesh
By Nandhini Nov 01, 2022 07:46 AM GMT
Report

உத்திரப்பிரதேசத்தில் மதுக்கடையில் ஒரு குரங்கு சரக்கு பாட்டிலை திருடி குடித்து ருசி பார்த்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சரக்கடித்த வினோத குரங்கு

உத்தரப்பிரதேசம், ரேபரேலியில் உள்ள குரங்கு ஒன்று மதுபானக் கடைகளுக்குள் புகுந்தது. அப்போது, அந்த மதுக்கடையில் இருந்த சரக்கு பாட்டிலைத் திருடிச் சென்று குடித்து ருசிப் பார்த்தது.

ருசியில் மயங்கிய குரங்கு, மீண்டும் மக்களிடமிருந்து மது பாட்டில்களை திருடி குடித்தது. இந்த குரங்கு மது ருசி பிடித்துப்போனதால், தினமும் மதுபிரியர்களிடமிருந்து மது பாட்டிலை திருடிச் செல்வதாக கடையின் உதவியாளர் வருத்தம் தெரிவித்துள்ளார். 

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் வழக்கம் போல் எங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.  

monkey-drinks-beer-viral-video