குழந்தைகளை தூக்கி சென்ற குரங்குகள்: சந்தேகத்தை கிளப்பும் வனத்துறையினர்

doctor kill animal
By Jon Feb 16, 2021 12:20 PM GMT
Report

கடந்த சில நாட்களுக்கு முன்பு புவனேஸ்வரி குழந்தைகளை உறங்க வைத்து விடு வெளியில் சென்றுள்ளார். அப்போது ஓட்டை பிரித்து வந்த குரங்கு குழந்தை ஒன்று தூக்கி சென்று இருந்த குளத்தின் பக்கத்தில் இருந்த சுவற்றின் மீது வைத்து சென்றுள்ளது. அப்போது மற்றொரு குழந்தையை அகழியின் தள்ளிவிட்டு சென்றது.

ஓட்டின் மேல் வீசப்பட்ட குழந்தை உயிருடன் மீட்கப்பட்டதாகவும், அகழியில் வீசப்பட்ட குழந்தை சடலமாக கண்டெடுக்கப்பட்டதாகவும் குழந்தையின் தாய் கூறியிருந்தார். இந்த நிலையில் இந்த சம்பவம் பற்றி குழந்தையினை பரிசோதித்த மருத்துவர்களிடம் வனத்துறையினர் விவரங்களை கேட்டறிந்தனர். அதில் இறந்த குழந்தையின் மேல் குரங்கின் நகக்கீறலோ எந்தவிதமான காயமோ இல்லை எனவும் ,குரங்கின் ரோமம் கூட குழந்தைகள் மேல் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்ததாக வனத்துறையினர் கூறியுள்ளனர்.

மேலும் குழந்தையை குரங்குகள் தூக்கிச் சென்றால், அதை லேசில் விட்டுவிடாது என்றும், ஒரு கையில் குழந்தையை தூக்கிக் கொண்டு தாவிச் செல்வதற்கான வாய்ப்புகள் கிடையாது எனவும் வனத்துறையினர் கூறுகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இறந்த குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே முழுமையாக விவரமும் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.