சிறுமியை கடத்திச் செல்ல முயன்ற குரங்கு - வைரலாகும் வீடியோ

By Petchi Avudaiappan Apr 23, 2022 07:03 PM GMT
Report

குரங்கு ஒன்று சிறுமியை தாக்கி கடத்திச் செல்ல முயன்ற சம்பவம் சீனாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவம் தென்மேற்கு சீனாவில் உள்ள சுங்கிங் நகராட்சியில்தான் நடைபெற்றுள்ளது. தெருவில் சிறுமி ஒருவர் சென்று கொண்டிருந்தபோது அவளை பின் தொடர்ந்து வந்த குரங்கு திடீரென தாக்கி தாக்கியது. சிறுமியை தரையில் இழுத்துப் போட்ட பின்னர் தரதரவென்று இழுத்துச் செல்ல குரங்கு முயன்றது. 

ஆனால் அதற்குள் அங்கிருந்தவர்கள் சிறுமியை குரங்கிடம் இருந்து விரைந்து மீட்டனர். ஆனால் குரங்கு பலமாக தாக்கியதில் சிறுமியின் தலையில் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடந்த விசாரணையில் சிறுமியின் தாயார் லியூ வீட்டில் சமைத்துக் கொண்டிருந்தபோது சிறுமி வெளியே சென்று சென்றது தெரிய வந்தது. 

அதேசமயம் இதே குரங்கு கடந்த ஆண்டு மே மாதமும் இந்த பகுதிக்கு வந்ததாகவும், அப்போது சிலரை தாக்கியதாகவும் சுங்கிங் நகர மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அதனை பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.