காட்பாடியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா - அதிமுக வேட்பாளர் உட்பட 9 பேர் மீது வழக்கு
காட்பாடி அடுத்த மெட்டுக்குளம் தனியார் உணவகத்தில் அதிமுக தரப்பில் நள்ளிரவில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயற்சி செய்துள்ளனர். இதனை அறிந்து காட்பாடி பறக்கும் படை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே காட்பாடி பறக்கும்படை அலுவலர் நரேஷ் குமார் தலைமையில் அங்கு விரைந்து வந்த போலீசார் நள்ளிரவு சோதனை நடத்தினர்.
அப்போது, சோதனையில் ரூ. 18 லட்சத்திற்கு மேல் பணம் கைப்பற்றப்பட்டன. இதனையடுத்து, பண விநியோக விவரம் அடங்கிய ஆவணங்கள், வங்கி ஆவணங்கள், லேப்டாப், பூத் சிலிப்புகள், அதிமுக வேட்பாளர் ராமுவின் படம் மற்றும் சின்னம் பொறிக்கப்பட்ட துண்டு பிரசுரங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளதையடுத்து, அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேட்பாளர் ராமு உட்பட 9 பேர் பேர் மீது தேர்தல் விதிமுறை மீறல், சட்டவிரோத கூட்டம் கூடுதல், அவதுராக பேசுதல், அரசு அலுவலர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல், அதிகாரிகளை மிரட்டுதல், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து கவர்ந்து வாக்குகளை பெற முயன்றல் உட்பட 5 பிரிவுகளின் கீழ் காட்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.