ஆர்யா மீதான பணமோசடி வழக்கு : சிபிசிஐடி பதிலளிக்க உத்தரவு!

case arya moneylaundering
By Irumporai Jul 28, 2021 02:43 PM GMT
Report

திருமனம் செய்து கொள்வதாக கூறி பணமோசடி செய்த  நடிகர் ஆர்யா மீதான வழக்கில் விசாரணை குறித்து பதிலளிக்க சிபிசிஐடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருமணம் செய்து கொள்வதாக கூறி 70 லட்சம் ரூபாய் நடிகர் ஆர்யா பண மோசடி செய்ததாக ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த வித்ஜா என்பவர்  சிபிசிஐடி போலீசாரிடம் புகார் அளித்திருந்தார்.

கடந்த மார்ச் மாதம் அளித்த இந்த புகாரின் மீது வழக்கு பதிவு செய்ய சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிடக்கோரி வித்ஜா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி நிர்மல் குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, சாயிஷாவை விவாகரத்து செய்து விட்டு தன்னை திருமணம் செய்வதாக கூறி, ஆர்யா பண மோசடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை நிலை குறித்து பதிலளிக்க சிபிசிஐடி போலீசார் தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி நிர்மல் குமார், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் மாதம் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்