மணி ஹெய்ஸ்ட் தொடரின் 5வது சீசன் எப்போது... வெளியான அதிகாரப்பூர்வ தகவல்..

Netflix money heiat 5
By Petchi Avudaiappan May 24, 2021 04:13 PM GMT
Report

பிரபல இணைய தொடரான மணி ஹெய்ஸ்ட்டின் 5வது சீசன் எப்போது ஒளிபரப்பாகும் என்பதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நாடகம், சினிமா ஆகியவற்றை தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக இணைய தொடர்களும் அனைவராலும் விரும்பி பார்க்கப்படும் ஒன்றாக அமைந்து வருகிறது.

மணி ஹெய்ஸ்ட் தொடரின் 5வது சீசன் எப்போது... வெளியான அதிகாரப்பூர்வ  தகவல்.. | Money Heist 5 Netflix Announces Release Dates

அந்த வகையில், நெட்ப்ளிக்ஸில் 2017 ஆம் ஆண்டு வெளியான வெளியான மணி ஹெய்ஸ்ட் இணைய தொடர் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கின் போது இந்த இணையத் தொடர் அனைத்து மொழி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

இதுவரை 4 சீசன் முடிவடைந்ததால் 5வது சீசனின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

அதற்கு விடை அளிக்கும் வகையில் மணி ஹெய்ஸ்ட்டின் 5வது சீசனின் முதல் பகுதி செப்டம்பர் 3-ம் தேதியும், இரண்டாம் பகுதி டிசம்பர் 3-ம் தேதியும் வெளியாகும் என்று நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.