ஓசூர் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் நகைகளை கொள்ளையடித்த கும்பல் கைது

gold company fiance
By Jon Jan 25, 2021 01:43 PM GMT
Report

ஓசூர் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.12 கோடி நகைகளை கொள்ளையடித்த வழக்கில் 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். ஓசூர் பாகலூர் சாலையில் உள்ள முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது.

இந்த நிலையில் நேற்று பட்டப்பகலில் 25 கிலோ தங்க நகைகளை மர்மநபர்கள் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்து சென்றனர். இந்த கொள்ளைகும்பலை குறி வைத்து கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர் போலீசார். போலீசார் நடத்திய விசாரணையில், கொள்ளையடித்த 6 நபர்களையும் ஐதராபாத்தில் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கைத்துப்பாக்கி மற்றும் கொள்ளைபோன நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.