சிறுவனுடன் 40 வயது பெண் உல்லாசம் - பணம் கேட்டதால் ஆத்திரத்தில் 3 இளைஞர்கள் வெறிச்செயல்!
பணம் கேட்ட பெண்ணை 3 இளைஞர்கள் அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் உறவு
கிருஷ்ணகிரி, குண்டியால்நத்தம் பகுதி காப்புக்காட்டில் நான்கு நாட்களுக்கு முன்பு திருமணமான பெண் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார். அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக மகள் பர்கூர் புகாரளித்தார்.
அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில், உயிரிழந்த பெண்ணின் செல்போன் சுமார் 30 அடி தூரத்தில் தூக்கி வீசப்பட்டிருந்தது.
அடித்துக் கொலை
செல்போன் எண்ணை ஆய்வு செய்தபொழுது திருப்பத்தூர், நாட்ராம்பள்ளியை சேர்ந்த ஏழுமலை என்ற இளைஞருடன் அவர் கடைசியாக பேசியுள்ளது தெரியவந்தது. அதன்பின் அவரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது ஏழுமலை, கோவிந்தராஜ், 17 வயது சிறுவன் ஒருவன் என மூன்று பேர் மது அருந்திவிட்டு பெண்ணிற்கு போன் செய்து உடனடியாக காப்புக்காட்டுப் பகுதிக்கு வரும்படி தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அங்கு வந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளனர்.
பெண்ணும் இளைஞர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். பின்னர் மூவரிடமும் பணம் கேட்டுள்ளார்.
அதற்கு மறுப்பு தெரிவித்ததால் அங்கிருந்த நபர் ஒருவரின் செல்போனை பறித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்தவர்கள் அந்த பெண்ணை தாக்கி கொலை செய்துள்ளனர்.
அதனையடுத்து மூவரையும் கைது செய்து, 17 வயது சிறுவனை கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.