ஊழல் குறித்து பேசும் கமல் ஏன் திமுக பற்றி பேசுவதில்லை- அமைச்சர் பாண்டியராஜன் கேள்வி
சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் தமிழகத்தில் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. அரசியல் கட்சிகள் மிகத் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று கமல்ஹாசனை முதல்வர் வேட்பாளராகவும் நிரந்தர தலைவராகவும் மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு தேர்வு செய்துள்ளது.
தேர்தல் பிரச்சாரங்களில் ஊழல் குறித்து பேசும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், திமுக பற்றி ஒரு வார்த்தை கூட பேசாதது ஏன்? என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் திடிரென வந்து வேகமாக தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்றார். நல்லாட்சி தருவேன் என்று கூறி, அறிக்கையெல்லாம் வெளியிடுகிறார்கள்.
ஆனால், திமுக பற்றி ஒரு வார்த்தை கூட கமல்ஹாசன் பேசாதது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஏனென்றால் ஊழலின் ஒட்டு மொத்த உருவமாக இன்றைக்கு இருக்கிறது திமுக தான்.
அதுமட்டுமல்லாமல் வாரிசு அரசியல் என்றாலே திமுக தான் என்று பேசப்படும் காலத்தில், ஒரு வார்த்தை கூட திமுக குறித்து பேசாதது என்பது கமல்ஹாசன் ஒரு வகையில், திமுகவன் பி-டிமாகத்தான் இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.