தலைவலியான Monday: மோசமான நாள் - புலம்பலுக்கு செவி சாய்த்த கின்னஸ்!
திங்கள்கிழமையை வாரத்தின் மோசமான நாளாக கின்னஸ் உலக சாதனை அமைப்பு அறிவித்துள்ளது.
Monday Blues
திங்கள்கிழமை என்றாலே, அனைவருக்கும் ஒரு அலர்ஜிதான். பள்ளி காலம் முதலே திங்கள்கிழமை என்றாலே யாரும் முகம் சுழிக்க தவறுவதில்லை. அந்த அளவிற்கு நமக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய பெருமை இந்த திங்கள் கிழமையையே சாரும்.

இதனை Monday Blues என்று சொல்வார்கள். தற்போது, அனைவரது புலம்பலையும் கேட்ட கின்னஸ் உலக சாதனை அமைப்பு திங்கட்கிழமை வாரத்தின் மிக மோசமான நாளாக அறிவித்துள்ளது. இதுகுறித்து ஒரு ட்வீட்டையும் பதிவு செய்துள்ளது.
மோசமான நாள்
அதில், "வாரத்தின் மிக மோசமான நாளுக்கான ரெக்கார்டை நாங்கள் திங்கட்கிழமை அதிகாரப்பூர்வமாக வழங்குகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பலரும் ஆதரித்து, வேடிக்கையான கமெண்டுகளை அளித்த வண்ணம் உள்ளனர்.
we're officially giving monday the record of the worst day of the week
— Guinness World Records (@GWR) October 17, 2022
சிலர், ஜாலியாக அப்போ இனி வாரத்தில் 3 விடுமுறை நாட்களாகுமா? என கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. பலரும் இதனை பகிர்ந்து தங்களது ஆதங்கத்தை கொட்டி தீர்த்து வருகின்றனர்.