பாலிவுட்டில் அறிமுகம்.. மோனாலிசாவை ஏமாற்றிய இயக்குனர்? தயாரிப்பாளர் அதிர்ச்சி தகவல்!
மோனாலிசாவை திரைப்பட இயக்குநர் ஏமாற்றிவிட்டதாகத் தயாரிப்பாளர் தெரிவித்துப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மோனாலிசா
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகாகும்பமேளாவில் இந்தூரை சேர்ந்தவர் 16 வயது இளம்பெண் மோனாலிசா பாசி மாலையை விற்று வந்த நிலையில் இணையத்தில் வைரலானார். இவரது அழகான கண்கள், கருமை நிறம், சிரித்த முகம், தன்னம்பிக்கையான பேச்சு, எளிமையான தோற்றம் காண்போர் கவனத்தை ஈர்த்தார்.
இதனால் மோனாலிசாவின் புகழ் திடீரென்று உயர்ந்தது. இந்த நிலையில் திரைப்பட இயக்குநர் சனோஜ் மிஸ்ரா தனது அடுத்த படத்தில் மோனலிசாவை கதாநாயகியாக நடிக்க வைக்கப் போவதாகவும், இதற்காக நடிப்பு பயிற்சியைத் தனது சொந்த செலவில் வழங்குவதாகவும் மனோஜ் மிஸ்ரா கூறியிருந்தார்.
தயாரிப்பாளர்
இந்த சூழலில் கேரளாவில் உள்ள பிரபல நகை திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மோனலிசா வருகை தந்திருந்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இதற்கிடையே திரைப்பட தயாரிப்பாளர் ஜிதேந்திர நாராயணன் மோனலிசாவை சனோஜ் மிஸ்ரா ஏமாற்றிவிட்டதாகக் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அவர் கூறுகையில் இயக்குநர் சனோஜ் மிஸ்ராவிடம் பணம் இல்லை .சனோஜ் மிஸ்ரா தன்னை ஒரு மகளைப் போன்று நடத்துவதாக மோனலிசா கூறியது எதிலும் உண்மை இல்லை என்றும் கூறியுள்ளார்.
நேபாளத்தில் நடைபெறும் சிவராத்திரி கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள மோனலிசாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.