கும்பமேளாவில் படு வைரல்..எல்லை மீறிய யூடியூபர்கள்- இரவோடு இரவாகப் இளம்பெண் செய்த காரியம்!
கும்பமேளாவில் படு வைரலான இளம்பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கும்பமேளா
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகாகும்பமேளா ஜனவரி 12ஆம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி வரை 45 நாட்கள் நடைபெறும். இந்த விழாவில் இந்தூரை சேர்ந்தவர் 16 வயது இளம்பெண் மோனாலிசா போஸ்லே என்பவர் கைகளால் செய்யப்படும் பாசி மாலையை விற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் மோனலிசா பாசி மாலைகள் விற்றதை யூடியூபர் ஒருவர் ரீல்ஸ் எடுத்து பதிவேற்றம் செய்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் அழகான கண்கள், கருமை நிறம், சிரித்த முகம், தன்னம்பிக்கையான பேச்சு, எளிமையான தோற்றம் காண்போர் கவனத்தை ஈர்த்தார்.
இளம்பெண்
மேலும் அவருடன் செல்பி மற்றும் வீடியோ எடுத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.அதுமட்டுமில்லாமல் பாலிவுட் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா இயக்கத்தில் மோனலிசா கதாநாயகியாக நடிக்க உள்ளார். இந்நிலையில்,அவரை வியாபாரம் செய்ய விடாமல் செல்பி எடுத்து டார்ச்சர் செய்து வருகின்றனர்.
இதனால் பெரும் சிரமத்திற்கு ஆளான மோனலிசா கருப்பு நிற மாஸ்க்கை அணியத் தொடங்கினார்.இதனை மீறியும் மக்கள் அவரை பின்தொடர ஆரம்பித்தனர். இதனால் மகளின் பாதுகாப்பிற்கு பெரும் ஆபத்து என்பதை உணர்ந்த பெற்றோர் அவரை இரவோடு இரவாகப் பேருந்தில் ஏற்றி சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்