பள்ளி சிறுவனுடன் உல்லாசம் - 2 குழந்தைக்கு தாயான பெண் செய்த காரியம்
பள்ளி சிறுவனுடன் வீட்டை விட்டு ஓடிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
பள்ளி சிறுவன்
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள அரசு பள்ளியில் 16 வயது சிறுவன் ஒருவர் 11ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இவரது வீட்டின் அருகே 24 வயதான வினோதினி என்ற பெண் வசித்து வந்துள்ளார். வினோதினிக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது.
வீட்டை விட்டு ஓட்டம்
ஆரம்பத்தில் இருவரும் அக்கா தம்பியாக பழகி நாளடைவில் வினோதினிக்கு சிறுவன் மீது காதல் ஏற்பட்டுள்ளது. ஆசை வார்த்தை கூறி சிறுவனை தனது வலையில் வீழ்த்திய அவர், சிறுவருடன் அடிக்கடி உல்லாசம் அனுபவித்துள்ளார்.
இந்நிலையில் தனது கணவர் மற்றும் இரு குழந்தைகளை தவிக்க விட்டு, சிறுவனுக்கு ஆசை வார்த்தை கூறி இரு நாட்களுக்கு முன் வீட்டை விட்டு அழைத்து சென்றுள்ளார். பள்ளிக்கு சென்ற சிறுவன் வீட்டிற்க்கு வராத நிலையில் அவரது பெற்றோர் பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்த பெரியபாளையம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கல்பட்டு என்ற கிராமத்தில் இருவரையும் கண்டுபிடித்துள்ளனர். வினோதினியை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறையினர் சிறுவனை அரசின் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் சேர்த்துள்ளனர்.