செல்போனுக்கு அடிமையான 2 குழந்தைகளின் தாய்! தலையில் ஆட்டுக்கல்லை போட்ட குடிகார பாட்டி! நிற்கதியான குழந்தைகள்!!
மேட்டுப்பாளையம் அருகே 2 குழந்தைகளின் தாய் இரவெல்லாம் செல்போனில் ஆண் நண்பர்களுடன் பேசி கொண்டிருந்த பெண்ணை, அவரது தாயே தலையில் ஆட்டுக்கலை போட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை பகுதியை சேர்ந்த நாகமணி, கணவனை இழந்த அவரது மகள் நதியாவுக்கு சரவணகுமார் என்பவருடன் இரண்டாவது திருமணம் செய்து வைத்துள்ளார்.
இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகளும், 12 வயதில் ஒரு மகனும் உள்ள நிலையில், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். சரவணக்குமார் இறந்த பின்னர், நதியா வேறு வேறு ஆண்களுடன் தொடர்பை ஏற்படுத்தி கொண்டு அடிக்கடி செல்போனில் அவர்களுடன் உரையாடி கொண்டிருந்துள்ளார்.
இதனால் தாய் வீட்டிற்கு வந்த நதியா தனிமையை பயன்படுத்தி, அடிக்கடி அவர்களோடு வெளியே சுற்றி வந்துள்ளார். இவரது தாய் நாகமணி ஏற்கனவே குடிபோதைக்கு அடிமையாகி இருந்துள்ளார். இந்த நிலையில், மகள் இவ்வாறு செய்வதை கண்டு ஆத்திரமடைந்த நாகமணி, அவ்வபோது மகளை கண்டித்துள்ளார்.
இதனால் கடுப்பான நதியா நாகமணியை அடித்து வீட்டை விட்டு விரட்டியடித்துள்ளாஅர். இதனை தாங்க இயலாத நாகமணி மகளை பழி வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் மகளோடு சமாதானத்தில் ஈடுபட்டு இருவரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர்.
இதனை தொடர்ந்து மகள் நதியா படுக்கையில் தூங்க சென்ற போது போதையில் இருந்த தாய் நாகமணி , மகளில் தலையில் ஆட்டுக்கல்லை போட்டுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த நதியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து நாகமணி காவல்நிலையத்தில் கொலை செய்ததாக சரண் அடைந்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை மீட்டு, கைதான நாகமணியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த கோர சம்பவத்தில் தாய், தந்தை, பாட்டி என அனைவரையும் இழந்து 2 குழந்தைகளும் நடு ரோட்டில் தத்தளித்து வருகின்றனர்.