புலியிடம் சண்டையிட்டு குழந்தையை காப்பாற்றிய வீரத்தாய்
மத்திய பிரதேசத்தில் குழந்தையை தாக்கிய புலியிடம் இருந்து தாய் போராடி தனது குழந்தை மீட்டுள்ளார்.
புலியை எதிர்த்து போராடிய தாய்
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள மாலா பீட் ஆஃப் ரோஹானியா கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ச்சனா. இவருக்கு ரவிராஜ் என்ற மகன் உள்ளார். தனது மகனை அழைத்துக் கொண்டு வெளியே சென்றுள்ளார்.
அப்போது புதரில் பதுங்கி இருந்த புலி ஒன்று குழந்தையை தாக்க தொடங்கியது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த தாய் அர்ச்சனா. குழந்தை மீட்க புலியிடம் சண்டையிட்டுள்ளார்.
அப்போது புலி குழந்தையை விடாமல் தலையை இறுகப் பிடித்து தலையை தாக்க முயன்றுள்ளது. அப்போது அர்ச்சனா புலியை குழந்தையின் தலையை கடிக்கவிடாமல் தடுத்துள்ளார். ஆனால் புலி பயங்கரமாக தாக்க தொடங்கிய போது அர்ச்சனா புலியை காலால் எட்டி உதைத்தும், கையால் குத்தியும் உள்ளார்.

புலியிடம் அர்ச்சனா சண்டையிடும் காட்சியை பார்த்த அப்பகுதி மக்கள் காப்பாற்ற சென்றனர். இதை பார்த்து புலி அங்கிருந்து தப்பி ஓடியது. பின்னர் அர்ச்சனாவையும், குழந்தையையும் மீட்ட கிராம மக்கள் மான்பூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக அவர் உமரியா மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பலத்த காயம்
புலி தாக்கியதில் அர்ச்சனாவின் வயிறு, முதுகு மற்றும் கைகளில் காயங்கள் ஏற்பட்டதாக அவரது கணவர் போலா பிரசாத் தெரிவித்துள்ளார்.
புலி தாக்கியதில் அர்ச்சனாவிற்கு பலத்த காயம் ஏற்பட்டது.மேலும் குழந்தையில் தலையில் ஆழமான காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
தகவல் அறிந்து மருத்துவமனைக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா, புலி தாக்கியதில் காயம் அடைந்த அர்ச்சனா மற்றும் அவரது மகனை சந்தித்து நலம் விசாரித்தார்.
மேலும் அர்ச்சனா மற்றும் அவரது மகனுக்கு மேல் சிகிச்சை அளிக்க இருவரையும் ஜபல்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் பற்றி மாவட்ட ஆட்சியர் வனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.