உணவளிக்க மறுத்த தாய் - கத்தியால் குத்திக் கொன்ற கொடூர மகன்
குடிபோதையில் வந்த மகனுக்கு உணவு போட மறுத்த தாயை கத்தியால் குத்திக் கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார்.
சென்னை வேளச்சேரி நேருநகர், திரு.வி.க தெருவில் வசித்து வருபவர் லட்சுமி. இவரது மகன் மூர்த்தி நேற்றிரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தாயிடம் உணவு வேண்டும் என்று கேட்டுள்ளார்.
குடிபோதையில் வந்ததால் தாய், தனது மகனுடன் சண்டையிட்டுள்ளார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், அருகில் இருந்த கத்தியை எடுத்த மூர்த்தி தனது தாயை சரமாறியாக குத்தியுள்ளார். இதில், தாய் லட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து தகவலறிந்து அங்கு சென்ற வேளச்சேரி போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக இராயபேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தப்பியோடிய மூர்த்தியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.