பச்ச குழந்தையை தாக்கிய தாய்க்கு 15 நாள் சிறை - அதிரடி உத்தரவு!

arrest mom beaten 2 year baby
By Anupriyamkumaresan Aug 30, 2021 07:08 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in குற்றம்
Report

செஞ்சி அருகே ஒன்றரை வயது குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய் துளசிக்கு மனநலத்தில் பாதிப்பு ஏதுமில்லை என்று மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மோட்டூரில் வசித்து வரும் தம்பதி துளசி-வடிவழகன். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதால் , இவரது கணவன் துளசியை சித்தூருக்கு திருப்பி அனுப்பியுள்ளார். 

அப்போது துளசியின் செல்பேசியை பார்த்த போது, அதில் அவருடைய ஒன்றரை வயது குழந்தையை கொடூரமாக தாக்கிய வீடியோ இருந்துள்ளது.

இதனை பார்த்த வடிவழகன் காவல்துறையில் மனைவி துளசி மீது புகார் அளித்துள்ளார். மேலும், இந்த குழந்தையை அடிக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்தது.

பச்ச குழந்தையை தாக்கிய தாய்க்கு 15 நாள் சிறை - அதிரடி உத்தரவு! | Mom Beaten Harrased 2 Year Baby Arrest Viral Video

இதன் பின்னர், விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையின் உத்தரவால், ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்த துளசியை சிறப்பு தனிப்படை காவல்துறையினர் நேற்று கைது செய்யப்பட்டார்.

ஒன்றரை வயது குழந்தையை இவ்வளவு கொடூரமாக தாக்கிய துளசி மனநலம் பாதிக்கப்பட்டாரா என பரிசோதனை செய்ய விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

பரிசோதனையில் துளசிக்கு மனநலத்தில் பாதிப்பு ஏதுமில்லை என்பது தெரியவந்துள்ளது. துளசியை பரிசோதனை செய்து அவரிடம் கேட்ட சில கேள்விகளுக்கு சரியான பதில்களை அளித்தார். குழந்தையை தாக்கியது தொடர்பாக வருந்துகிறீர்களா என கேட்டதற்கு வருந்துவதாகவும் துளசி தெரிவித்துள்ளார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் துளசியை 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளனர்.