சென்னை அணியின் முன்னாள் வீரருக்கு ஏற்பட்ட பரிதாப நிலைமை - ரசிகர்கள் சோகம்
ஒருகாலத்தில் சென்னை அணியில் முன்னணி பவுலராக இருந்த வீரரின் இன்றைய நிலைமையை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஐபிஎல் தொடரின் 15வது சீசன் வரும் மார்ச் 26 ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ள நிலையில் முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. அதேசமயம் அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
mohit Sharma net bowler in ipl???? pic.twitter.com/9a13Ki4f4F
— nayan (@nayanpa32831446) March 17, 2022
இதனிடையே புதிய இரண்டு அணிகளையும் சேர்த்து 10 அணிகள் விளையாடுவதால் நடப்பாண்டு ஐபிஎல் தொடர் 75 நட்கள் நடைபெறவுள்ளது. மேலும் மும்பை, புனே, அகமதாபாத் ஆகிய 3 நகரங்களில் மட்டுமே போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே நடப்பு சாம்பியனான சென்னை அணி கோப்பையை தக்க வைத்துக் கொள்வதற்காக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே குஜராத் மாநிலம் சூரத் நகரில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதிலும் அயர்லாந்தைச் சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் ஜோஸ் லிட்டிலை ஐபிஎல் தொடருக்காக பிரத்தியேக நெட் பந்துவீச்சாளராக ஒப்பந்தம் செய்துள்ள சென்னை அணி தனது பயிற்சியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
அதேபோல் மற்ற அணிகளும் பந்துவீச்சு பயிற்சிக்கென்றே வீரர்களை தேர்வு செய்து பேட்டிங் பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. அதன்படி புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி அகமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டுள்ள புகைப்படம்,வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது.
அதை பார்த்த ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் குஜராத் டைட்டன்ஸ் அணியினருடன் இந்திய வீரர் மோகித் சர்மாவும் இருந்தார். அவர் குஜராத் அணிக்காக விளையாடும் ஒரு வீரராக இல்லாமல் வலைப்பயிற்சியில் பந்து வீசும் ஒரு பந்து வீச்சாளராக இடம் பெற்றுள்ளர். இதைப் பார்த்த பல ரசிகர்கள் இவருக்கு இப்படி ஒரு நிலைமையா என புலம்பி தீர்க்கின்றனர்.