மொஹரம் திருநாள்; இஸ்லாமியர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

ADMK Edappadi K. Palaniswami
By Thahir Aug 09, 2022 06:05 AM GMT
Report

மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மொஹரம் திருநாள் 

இஸ்லாமியர்களின் இரண்டாவது புனித நாளாக மொஹரம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மொஹரம் பண்டிகை ஆகஸ்ட் 9 அன்று கொண்டாடப்பட உள்ளது.

ரமலானைப் போலவே, மொஹரம் பண்டிகையும் சந்திரன் பார்க்கும் தேதியைப் பொறுத்து கொண்டாடப்படுகிறது.

Saudi Arabia

மேலும் இந்த தினம் முஹர்ரம்-உல்-ஹரம் என்றும் அழைக்கப்படுகிறது. 354 அல்லது 355 நாட்களைக் கொண்ட ஹிஜ்ரி நாட்காட்டியின்படி மொஹரம் ஆண்டின் முதல் மாதம் ஆகும்.

இஸ்லாமிய நம்பிக்கைகளின்படி, கடவுளின் தூதராகக் கருதப்பட்ட முஹம்மது நபி, முஹர்ரம் மாதத்தை ‘அல்லாஹ்வின் புனித மாதம்’ என்று அழைத்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஆகஸ்ட் 9ம் தேதி மொகரம் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு தலைமை ஹாஜி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி வாழ்த்து 

மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்படுவதை அடுத்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Edappadi K. Palaniswami

இது குறித்த தனது ட்விட்டர் பக்கத்தில் இறைவனின் செயலுக்கு நன்றி கூறும் தியாக திருநாளான மொஹரம் தினத்தில், உலக மக்கள் அனைவரையும் பேணிப் பாதுகாத்து, துயர் நீக்கும் எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிக் கூறுவதுடன்,உலகில் சமத்துவம் தழைக்கவும், சகோதரத்துவம் மேம்படவும், ஒற்றுமை வலுப்பெறவும், இறைவனை பிராத்திப்பதாக தெரிவித்துள்ளார்.